திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (14:19 IST)

திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இணைய காரணம் என்ன??

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இணைவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
திமுக மற்றும் அதிமுகவில் உள்ள ஒருசில பிரபலங்கலும், வேறு கட்சியில் உள்ள பிரபலங்களும் பாஜகவில் விரைவில் இணைய இருப்பதாகவும் தேர்தல் நெருங்குவதற்குள் பலர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இன்று மாலை இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த மாறலுக்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
அதாவது மறைந்த ஜெ.அன்பழகன் பொறுப்பில் வருவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.  
 
சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் அதிருப்தி அடைந்தனர். இதில் ஒருவர் கு.க. செல்வம். எனவே தான் கு.க. செல்வம் பாஜகவிற்கு மாற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.