எல்லாத்துக்கும் காரணம் சூர்யாதேவிதான் -வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன் !

Last Modified திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:19 IST)

வனிதா திருமண விவகாரம் தொடர்பாக பேசிய நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர்கள் சூர்யா தேவி , நாஞ்சில் விஜயன் , கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வனிதா விவாகரத்தில் சிக்கி சின்னாபின்னமாகினர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். அதில் சூர்யா தேவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது சம்மந்தமாக வனிதா தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. சூர்யாதேவிதான் அனைத்துக்கும் காரணமான குற்றவாளி. கஸ்தூரி சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயனை உள்ளே இழுத்து விட்டார்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :