ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (12:34 IST)

இவர் தான் அவரா? "அஜித்தை பார்த்து பிரம்மித்து போன வித்யா பாலன்" !

பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான வித்யா பாலன் முதன்முறையாக நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகிறார். இதற்கு முன்னர் 2003ம் ஆண்டு வெளியான மனசெல்லாம் படத்திற்காக ஒப்பந்தமான வித்யாபாலனுக்கு நடிக்க தெரியவில்லை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். 


 
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்ற வேளையில் இப்படத்தில் கம்மிட்டானதை பற்றியும் படத்தில் நடித்ததை பற்றியும் மனம்திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன். 
 
முதலில்  "எனக்கு போனி ஜி தான் போனில் அழைத்து பிங்க் ரீமேக் தயாரிக்கவுள்ளதாக கூறினார். பின்னர் படத்தின் கதை கூட படிக்காமல் ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் எனக்கு ஸ்ரீ தேவி ஜி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. அதன் பிறகு தான் தெரிந்தது அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்று, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நான் பல காலமாக கேள்விப்பட்டு வருகிறேன். அதனால் மிகப்பெரிய ஸ்டாருடன் நடிக்கவுள்ளதை நினைத்து சந்தோஷப்பட்டேன். பின்னர் நேரில் அஜித்தை பார்த்தபோது நான் ரொம்ப ஷாக் ஆகிவிட்டேன். காரணம் எந்த விதமான பந்தாவும் இன்றி அவ்வளவு சிம்பிளாக இருந்தார். அவரிடம் நான் நிறைய பேசினேன்.  அவர் ரொம்ப பிரண்ட்லியானவர்.  


 
எனக்கு இந்த படம் நிச்சயம் தமிழ் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தரும். நேர்கொண்ட பார்வை படத்தில் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். நான் பாலக்காடு தமிழில் நன்றாக பேசுவேன். எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுவோம், மேலும் இப்படத்தில் கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு மேல் நான் படத்தை பற்றி எதுவும் சொல்லமுடியாது என்று கூறி நகைத்தார் வித்யா.