வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

'தீ முகம் தான்' பாடலின் அட்டகாசமான வரிகள்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'தீ முகம் தான்' என்ற தீம் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. நேற்றில் இருந்து தொடர்ந்து டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும் இந்த பாடலின் வரிகளை கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் வகையில் உள்ளதுதான் இந்த பாடலின் சிறப்பு. இதோ இந்த பாடலின் வரிகளை நீங்களும் படித்து பாருங்களேன்
 
 
தீ முகம்தான்
யார் இவன் தான்
ஓர் அடிதான்
பார் இடிதான்
நீ எதிரியா உதிரியா பதறியே வா
இமைப்பதும் வெடி இவன் நெருக்கடி
 
வா மோதிப்பாரு
அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு
வெள்ளைத்தாடி வெளிச்சம் அடிக்க
போய் எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எலும்ப
யார் இந்த ஆளு
இறங்கி பிடிப்பான் எதிரி நரம்ப
 
பிரிச்சு பிரிச்சு மேயுறான்
துரத்தித் துரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்
அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டிப் புரட்டி எடுக்கிறான்
பையில் புயலை அடைக்கிறான்
 
அஜித்தின் ரசிகர்களுக்காகவே பா.விஜய் எழுதிய இந்த அட்டகாசமான பாடலை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் திரையில் திரையிடப்படும்போது அஜித் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது