விஜய்யுடன் போட்டி போடும் போனி கபூர் " சிங்கப்பெண்ணே" பாடல் ஓரங்கட்டப்படுமா?

Last Updated: புதன், 24 ஜூலை 2019 (11:39 IST)
இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து ‘சிங்கப்பெண்ணே ‘ என்ற பாடல் நேற்று (ஜூலை 23) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இப்பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்யவேண்டுமென விஜய் ரசிகர்கள் மும்முமாக களத்தில் இறங்கி ட்விட்டரில் மூழ்கி கிடக்கின்றனர். 


 
இதனால் அஜித் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட்ஸ் வராதா என காத்திருந்த வேலையில் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். ஆம்,  நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து அஜித்  - வித்யா பாலன் இடம்பெறும் "அகலாதே" என்ற பாடல் நாளை மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் போனி கபூர். 
 
இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். எனவே நேற்று வெளியான விஜய்யின்  பிகில் பட சிங்கப்பெண்ணே பாடலை "அகலாதே" பாடல் முந்தியடித்து ஓவர் டேக் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :