அஜித்துடன் மோதும் விக்ராந்த் – நேர்கொண்ட பார்வையை சமாளிக்குமா பக்ரீத் !

Last Updated: சனி, 20 ஜூலை 2019 (16:34 IST)
அஜித் படம் வெளியாக இருக்கும் அதே நாளில் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள பக்ரீத் படமும் வெளியாக இருக்கிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் அஜித். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 8 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார். இந்தப்படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்தப்படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப்படம் வெளியாகும் அதே நாளில் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள் பக்ரீத் படமும் வெளியாக இருக்கிறது. பெரிய படத்தோடு மோதாமல் இருக்கவே சிறியப் படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். ஆனால் தொடர் விடுமுறை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு வரிசையாக பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் தைரியமாக பக்ரீத் படக்குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :