வெள்ளி, 4 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2025 (07:15 IST)

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் ரிலீஸில் தாமதம்..!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவரின் அடுத்த படமாக ‘குட் பேட் அக்லி’ அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. குறிப்பாக டீசர் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் படம் 2 மணிநேரம் 18 நிமிடம் ஓடும் அளவுக்கு வெட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று டிரைலர் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் டிரைலர் நாளை ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.