50 கோடி சொல்லும் தயாரிப்பாளர்…அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள் – இழுத்தடிக்கும் நேர்கொண்ட பார்வை பிஸ்னஸ் !

Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (08:21 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் இன்னும் முடியாமல் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் அஜித். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 8 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார். இந்தப்படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

ரிலிஸுக்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இந்தப்படத்தின் வியாபாரம் இன்னும் முடியாமலேயே உள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் மிகப்பெரிய வசூலைக் கொடுத்ததால் இந்தப்படத்துக்கு தமிழக விநியோக உரிமையாக 50 கோடி ரூபாய் நிர்னயித்துள்ளாராம் போனி கபூர். ஆனால் விஸ்வாசம் மாஸ் மசாலாப் படம். நேர்கொண்ட பார்வை யோ கிளாஸானப் படம். இது புறநகர்ப் படங்களில் அந்த அளவுக்கு எடுபடாது. எனவே 40 கோடி வரை வந்தால் பார்க்கலாம் என சொல்லியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :