சல்மான் கான் படத்தின் அரங்கம் கலைப்பு… தயாரிப்பாளர் எடுத்த முடிவு!
சல்மான் கான் நடிப்பில் உருவாக இருந்த டைகர் 3 படத்துக்காக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தை கலைக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
சல்மான் கான் மற்றும் கேத்ரினா கைப் நடிப்பில் டைகர் 3 என்ற படம் உருவாக இருந்தது. இந்த படம் ஏற்கனவே வெளியான ஹிட் படமான ஏக் தா டைகர் படத்தின் மூன்றாவது பாகமாகும். படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்தார் ஆதித்யா சோப்ரா. ஆனால் படப்பிடிப்பு துவங்க இருந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகமானது மற்றும் நாயகி கேத்ரினா கைப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆகியக் காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் கோராஹான் பகுதியில் படத்துக்காக மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வீசிய புயலால் அரங்கின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்குவது குறித்து எந்த உத்தரவாதமும் இல்லாததால் அரங்கைக் கலைக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.