வியாட்நாமில் பரவியது டெல்டா வகை கொரோனாதான்! – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் வியட்நாமில் புதிய கொரோனா உருவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் மாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் தோன்றி உலக நாடுகள் சிலவற்றிலும் பரவியுள்ளது. இதுவரை இந்தியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மாற்றமடைந்த கொரோனா திரிபு கண்டறியப்பட்ட நிலையில் வியட்நாமில் திரிபடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் தற்போது அதை மறுத்து உலக சுகாதார அமைப்பு, வியட்நாமில் புதிய வீரியமிக்க கொரோனா திரிபு உருவாகவில்லை என்றும், டெல்டா வகை கொரோனாவே வியர்நாமில் பரவியுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்திய வகை கொரோனாவிற்கு டெல்டா என சமீபத்தில் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.