கல்லூரி நண்பர்களுடன் விண்டேஜ் விஜய்! இணையத்தில் பரவும் புகைப்படம்!
நடிகர் விஜய் தனது கல்லூரி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்துள்ளார். ரஜினியை விட அதிகமாக தமிழ்நாட்டில் அவர் வசூல் சாதனை செய்து வருகிறார். கடைசியாக வெளியான அவரின் படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன. நாளுக்கு நாள் அவரின் சம்பளம் எகிறிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் விஜய் தனது கல்லூரி நண்பர்கள் பலருடன் கோட் சூட் அணிந்து காணப்படுகிறார். அந்த புகைப்படத்தில் சஞ்சய் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நடிகர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.