1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (15:02 IST)

#ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்… டுவிட்டரில் ஹேஸ்டேக் டரெண்டிங்…

ரஜினி தனது ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இதை ரஜினி தரப்பினர் உறுதி செய்யாத நிலையில், இன்று ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தை தான் எழுதவில்லை ; எனினும் அந்தக் கடித்ததில் உள்ளது தகவல்கள் உண்மை தான் என தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும்  மக்களும்தான் எனக்குக் கடவுள். அதனால் அவர்களிடம்  எல்லா உண்மைகளையும் நான் சொல்லுவேன்.
 

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உண்டாக வேண்டுமென இந்த ஆண்டு மார்ச், மே, ஜுன்,ஜூலை மாதங்களில் அனைத்து மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பின், அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாட்டு நடத்தி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனாவால் அது முடியவில்லை.
 

எனது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலும் என்னால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனக்கு உயிர் மீது பயமில்லை; என்னை நம்பி வருவோர்களின் நலன் பற்றியதான் கவலை.

கடைசியில் மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்..மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வாழ்க தமிழ் மக்கள், வளர்க்க தமிழ்நாடு. !! அன்புடன் ரஜினிகாந்த் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் கடிதம் குறித்து ரஜினி இன்று   தனது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அந்தக் கடித்ததை தான் எழுதவில்லை என்று கூறியிருந்தார் மேலும் தனது உடல் நிலை, மருத்துவர் கூறிய அறிவுரைகள் எல்லாம் உண்மைதான் எனவும், ஆலோசித்து ஆன்மீக அரசியல்  குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தும் ஓட்டுபோட்டால் ரஜினிக்குத்தான் என்று ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

வரும் 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அத்துணை கட்சிகளும் வெற்றி பெற வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.