அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையாவுக்கு பதவி?…உதயநிதி ஸ்டாலின் கேள்வி !

shanmugam subbaiya
Sinoj| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (23:45 IST)

சில மாதங்களுக்கு முன் ஒரு முதியவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் பாஜக நிர்வாகி சண்முகம் சுப்பையா.

இந்நிலையில் பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,’’ தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-மரியாதைக்குரிய கல்வியாளர்கள் உள்ளனர். எனினும், பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என பெண் ஒருவர் வீட்டின் முன் சீறுநீர் கழித்த தகுதியைக்கொண்டு பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது கேவலம் பொய் சொல்லி-கலவரம் செய்தால் அமைச்சர்-சிறுபான்மையினரை மிரட்டினால் எம்.பி-கோமியம் குடித்தால் எம்.எல்.ஏ என உயர் பொறுப்புகளுக்கு காவிகள் வைத்திருக்கும் தகுதிகள் இவை. இதில் புதிய இணைப்பு அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்தால் AIIMS-ன் வழிகாட்டுக்குழு உறுப்பினர் ஆகலாம் என்பது’’ என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :