திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (20:06 IST)

விஷால் , ஆர்யா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் புதிய அப்டேட் !!

விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமி சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஆர்யா , விஷால். நடிப்புத் தொழிலைத் தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்த படம் அவன் இவன்.  இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். வழக்கமாக வரும் அவருடைய படங்களை ஒத்திருந்தாலும் காமெடியில் எல்லோராலும் பேசப்பட்டது.

இப்படத்தி விஷாலில் நடிப்பும் ஆர்யாவின் நடிப்பும் எல்லோராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் இருவரும் ஒன்பது வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.இதுகுறித்த முன்னரே அறிவிப்பு வெளி வந்தது.

இப்படத்தை  ஆனந்த சங்கர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தில் உரிய பாதுகாப்புடன் தொடங்கவுள்ளது.

மேலும், அவன் இவன் படத்தின் ஓபனிங் பாடலைப் போன்று இப்படத்தின் ஒரு பாடலை தற்போது படமாக்கியதாகத்  தகவல் வெளியாகிறது.