1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:37 IST)

பிரபல டிவி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை

தெலுங்கில் முன்னனி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வானி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக திரையுலகில் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளை சேர்ந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் குடும்ப பிரச்சனைகள், சினிமாவில் வாய்ப்பின்மை ஆகிய காரணங்களுக்காக தற்கொலை செய்யும் தவறான முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள்.
 
தெலுங்கில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருந்தவர் தேஜஸ்வனி. மிகவும் பிரபலமானவர். இவர் பவன் என்ற ஐடி ஊழியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு தேஜஸ்வனி தனது வேலையில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தேஜஸ்வனி நேற்று வீட்டிலுள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இவரது தற்கொலை தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.