திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Bala
Last Modified: புதன், 14 ஜனவரி 2026 (17:26 IST)

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

ஒன் மேன் ஷோ!  ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் வா வாத்தியாரே. மிக நீண்ட இடைவேளிக்கு பிறகு இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது. சில பல பிரச்சினைகள் காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க் கொண்டே இருந்தது. திவாலனவர் என கருதப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர் என்பவரிடம் வா வாத்தியாரே பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 10 கோடியே 35 லட்சத்தை கடனாக பெற்றார்.
 
அது வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சமாக மாறியது. இந்த ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கடனை திருப்பி செலுத்துவரை வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை நிறுத்த வேண்டும் என்றும் அர்ஜூன் லால் சொத்துக்களை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பற்றி ட்விட்டரில் பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்து கொண்டே இருக்கின்றன. எம்ஜிஆரின் தீவிர ரசிகராக ராஜ்கிரண் நடித்துள்ளார். அவரின் பேரனாக கார்த்தி நடித்துள்ளார். எம்ஜிஆர் இறந்த போது கார்த்தி பிறக்கும் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் எம்ஜிஆரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத ராஜ்கிரண் கார்த்தி பிறந்ததும் ‘வாத்தியாரே பிறந்துவிட்டார்’ என கொண்டாடுகிறார்.
 
எம்ஜிஆரின் மறுபிறப்பாக ராஜ்கிரண் கார்த்தியை பார்க்க ஆரம்பிக்கிறார். அதிலிருந்து கதை எப்படி போகிறது என்பது மீதிப்படம். இதில் கார்த்தி ஒன் மேன் ஷோவாக அவருடைய கேரக்டரை நல்ல முறையில் கொண்டு போயிருப்பதாக கூறுகிறார்கள். இரண்டாம் பாதியில் இரண்டு இடங்களில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் வருகிறதாம். அந்த நேரம் தியேட்டர் முழுவதும் ஒரு கூஸ் பம்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
 
இடைவேளை நல்ல முறையில் செய்திருப்பதாகவும் கூறி வருகிறார்கள். சொல்ல வரும் கதையும் ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் மொத்தத்தில் இந்தப் படம் ஃபேமிலியாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் கூறுகிறார்கள்.