‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தளபதி விஜய் நடிப்பில் மீண்டும் வெளியாகவிருந்த "தெறி" திரைப்படத்தின் ரீரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், சில திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தாணு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மற்ற படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவும், சுமுகமான வணிக சூழலை உருவாக்கவும் "தெறி" படத்தின் மறுவெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தள்ளிப்போன வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு, "தெறி" திரைப்படத்தின் ரிலீஸும் தள்ளிப்போயுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், புதிய படங்களுக்கு வழிவிடும் தயாரிப்பாளரின் இந்த முதிர்ச்சியான முடிவை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர். புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva