1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (16:42 IST)

14 ஓவர்களில் 25 ரன்கள்… ஆமை வேகத்தில் இந்திய அணி பேட்டிங்!

இந்திய அணி இரண்டாம் நாளில் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் 64 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சில் நேற்று தொடங்கியது. நேற்று இந்திய அணி 13 ஓவர்கள் சந்தித்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்து கட்டைப் போட்டு வருகின்றனர். இன்று விளையாடிய 14 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர்.