1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. nayanthara hi movie rasagulla song promo

நயன்தாரா - கவின் கூட்டணியில் ஹாய் படத்தின் ரசகுல்லா பாடல் ப்ரோமோ வெளியீடு

நயன்தாரா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார்  என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில்  இளம் நடிகர்களில் முன்னணி நாயகனாக வளர்ந்து வரும் கவினுடன் அவர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம்  ஹாய்  (Hi). முற்றிலும் வித்தியாசமான காதல் மற்றும் ஃபீல் குட் கதைக் களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இத்திரைப்படத்தை இளம் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் இயக்கும் முதல் படமிது. வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஹாய்  திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள  ரசகுல்லா  என்ற துள்ளலான காதல பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்பாடலின் முழு வீடியோ நாளை (ஜூலை 22-ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
தனுஷுக்கு அவ்ளோ அறிவுலாம் இல்ல!.. கஸ்தூரி ராஜா இப்படி சொல்லிட்டாரே!..