1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajini dont want jailer 2 movie audio launch in malaysia

Jailer 2: ஆடியோ லான்ச் மலேசியாவில் வேணாம்!.. ஆர்வம் காட்டாத ரஜினி!..

jailer2
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இதே டீம் உருவாக்கிய ஜெயிலர் திரைப்படம் வசூலில் சக்கை போடு  போட்டதால் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடைபெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ல புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது..

மலேசியாவில் திரைப்பட நிகழ்ச்சிகளை நடத்தும் மாலிக் சமீபத்தில் ரஜினியை சந்தித்ததால் இப்படி பேசப்பட்டது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனெனில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே ஸ்டேடியத்தில்தான் நடந்தது.

தற்போது ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை அங்கு நடத்தினால் விஜயை ரஜினி பின்பற்றுகிறார் என விஜய்யின் ரசிகர்கள் பேசுவார்கள். அதோடு அந்த மைதானத்தில் விஜய் கலந்து கொண்ட போது வந்த கூட்டத்தையும் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வரும் கூட்டத்தையும் ஒப்பிட்டு பேசுவார்கள். இது தேவையில்லாத விவாதங்களை ஏற்படுத்தும். எனவே சென்னையிலேயே ஏதேனும் ஒரு இடத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரஜினி சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பராசக்தி படம் இதனாலதான் ஓடல?!.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஷ்கரன் விளக்கம்..!