1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. kasthuri raja says dhanush has no knowledge

தனுஷுக்கு அவ்ளோ அறிவுலாம் இல்ல!.. கஸ்தூரி ராஜா இப்படி சொல்லிட்டாரே!..

dhanush
கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும், சிறந்த படமாக தனுஷ் இயக்கிய ராயன் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தங்கலான் படத்தில் விக்ரம் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.. அதேபோல் அமரன், வாழை, மெய்யழகன் போன்ற படங்களுக்கு கிடைக்காத விருது கேப்டன் மில்லர், ராயன் போன்ற படங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் ஆதாயத்திற்காகவே தனுசுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் சிலர் பேசினார்கள்.

சிலரோ தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா பாஜகவில் இருக்கிறார்.. அதேபோல் விருது வழங்கும் குழுவில் ஜூரியாக இருக்கும் நடன இயக்குனர் கலா பாஜகவில் இருக்கிறார். இவர்களை பயன்படுத்தி தனுஷுக்கு விருதை வாங்கியிருக்கிறார்கள் என பலரும் பேசத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ‘தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? அவர்கள் தங்களுடைய சொல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருதை வாங்கியிருக்க முடியாதா?.. இது அரசு மற்றும் தேர்வு குழு எடுக்கும் முடிவு.. மற்றபடி தனுசுக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
4 நாட்களில் 2700 கோடி வசூல்!.. வசூலை வாரிக்குவிக்கும் தி ஒடிசி!...