வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (09:08 IST)

75 வயதில் திருமணம்; மறுநாளே மருத்துவமனையில் அனுமதி – நடிகருக்கு நேர்ந்த சோகம் !

பெங்காலி மொழியின் பிரபல நடிகரான திபாங்கர் டே தனது இரண்டாவது திருமணம் முடிந்த அடுத்த நாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்காலி மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் அவர் நடிகை டோலான் ராய் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து இருவரும் கடந்த 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது. இந்த திருமணம் மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் முடிந்த அடுத்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.