செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (19:21 IST)

விஜய்யின் குருவி படம் 150 நாள் ஓடியது...? குழம்பிய நடிகர்... சமாளித்த தனுஷ்

கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான படம் குருவி. இப்படம்  150 நாட்கள் ஓடியதாக பிரபல நடிகர் பவன், அசுரன் 100 நாள் வெற்றி விழாவின் பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஸ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இப்படம் சுமார் 100 நாட்கள்  வெற்றிகரமாக ஓடியதால் இப்படத்தின் 110 வது நாள் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
 
இதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் பவன், குருவி படத்தின் 150 நாள் விழாவில் கலந்து கொண்டதாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை ; ஆனால் அசுரன் படத்துக்கு நடந்திருக்கு என பேசினார். அதைக் கேட்ட தனுஷ்  உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து பேசிய தனுஷ், இந்த விழா நடைபெறுகின்றபோது, நாம் பேசுவது நம்ம கண்ட்ரோல்ல இருக்கும் அதனால் எடு சரியாக உள்ளதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் ; சரியில்லாததை விட்டு விடுங்கள் என தெரிவித்து பவன் பேசிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.