பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சன்! மொத்தம் இத்தனை ஆயிரம் கோடியா!

Last Updated: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (11:44 IST)
பாலிவுட் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் படங்காக்கில் நடிப்பது மட்டுமல்லாமல், டிவி நிகழ்ச்சிகள், பல்வேறு விளம்பரப்படங்கள் உள்ளிட்டவற்றில்  நடித்து எபோதும் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கிறார். 


 
இருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். தற்போது 75 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை எடுத்து வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 
 
எனவே தற்போது தன் மகன் மற்றும் மகளுக்கு தன் சொத்துக்களை சரி சமமாக பிரித்து கொடுப்பதற்காக உயில் எழுதி வைத்துள்ளார். இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அபிஷேக் பச்சனுக்கும் ஸ்வேதா பச்சனுக்கும்  சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியிருந்தார். .
 
அதன்படி பார்த்தால் அமிதாப் பச்சனுக்கு,  சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :