செயற்கை மழை பொழிவு குறித்து சூப்பர் ஸ்டார் டுவிட் : அதிர்ந்து போன டுவிட்டர் ! வைரல் வீடியோ

Amitabh Bachchan
Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (20:10 IST)
செயற்கை மழை பொழிய வைக்க, நாசா உருவாக்கியுள்ள இயந்திரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.
உலகில் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். தற்போது நாஸா செயற்கை மழை பொழிய வைக்கும் இயந்திரங்களைக் கண்டறிந்துள்லதாக தகவல்கள் வெளியாகின்றது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் முலம் குறைந்த செலவில் பூமியில் மழை பொழிய வைக்க முடியும் என்று தெரிறது.
 
இந்நிலையில் இந்த  செயற்கை மழை பொழியும் இயந்திரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர பிரியப்படுவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
நம் இந்தியாவில்  பெருமளவு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டிகேப்ரியோ : சென்னையில் உள்ள நான்கு முக்கிய ஏரிகள் வற்றியதால் முக்கிய அங்கு மக்கல் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
இந்நிலையில் தற்போது அமிதாப் செயற்கை மழை பதிவிட்டுள்ளது, உலக அளவில் கவனம் பெற்றுள்ளது, மேலும் இந்தியாவின் தண்ணீர் தேவையையும் வலியுறுத்தியுள்ளது. இந்தப் பதிவிற்கு பலரும் லைக்குகள் போட்டு பாராட்டிவருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :