1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (08:32 IST)

பணத்திற்காக செட்டை கொளுத்திய டோலிவுட் மெகா வாரிசு...?

தெலுங்கு நடிகர் ராம் சரண் பணத்திற்காக செட்டை கொளுத்தியதாக செய்தி ஒன்று பரவியதையடுத்து அவர் கடுப்பாகி உள்ளார். 
 
நடிகர் ராம் சரண் தேஜா சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படம் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி முதலீடு போட்டி தயாரித்து வருகிறார். இந்த படத்தில், சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவின் பண்ணை வீட்டு வளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ.2 கோடிக்கும் மேலாக விலை மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்பட்டது. 
இந்த விவகாரத்தில் ராம் சரண்தான் பணம் இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்திற்காக செட்டை கொளுத்தினார் என ஊடங்களில் வதந்தி பரவியது. இது எப்படியோ ராம் சரண் காதுகளுக்கு போக அவர் பயங்கர கடுப்பாகி விட்டாராம். 
 
மேலும், ரூ.200 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை தயாரிக்கிறேன், கேவலம் ரூ.2 கோடி இன்சூரன்ஸுக்காக செட்டை எரிப்பேனா என்று கொந்தளித்தாராம். இன்சூரன்ஸ் காசுக்காக செட்டை எரிக்கும் கேவலமான விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் எனவும் தனக்கு நெருங்கியவர்களிடம் கத்தி தீர்த்தாராம்.