'ஹார்ட் பீட் 3' வெப்தொடரின் ஒளிபரப்பு எப்போது? வீடியோ வெளியிட்ட ஹாட்ஸ்டார்..!
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'ஹார்ட் பீட்' என்ற தமிழ் தொடரின் மூன்றாவது சீசனுக்கான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
மருத்துவ துறையை மையமாக கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், 'டெலி ஃபேக்டரி' தயாரிக்கும் 'ஹார்ட் பீட்' மூன்றாம் பாகம், அடுத்த ஆண்டு 2026-ல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு உள்ளிட்ட முந்தைய சீசனில் நடித்த நடிகர்கள் பலரும் இந்த புதிய சீசனிலும் நடிக்கின்றனர். இரண்டாம் பாகம் தீபா பாலு கோமா நிலைக்கு செல்வதுடன் முடிவடைந்த நிலையில், மூன்றாம் பாகத்தின் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ட்ரெய்லர் வெளியீடு மற்றும் ஒளிபரப்பு தேதி குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
