நடிகர் அஜித்குமாரை பாலிவுட்டு அழைக்கும் இயக்குநர்கள்..

ner konda parvai
Last Updated: ஞாயிறு, 30 ஜூன் 2019 (17:59 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்  அஜித்குமார். இவருக்கு தமிழகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் மக்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் தற்போது அஜித்குமார் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.  கூடிய விரையில் இந்த படம்  திரைக்கு வரவுள்ளது. மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
 
இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடிக்குமாறு நடிகர் அஜித்துக்கு பல இயக்குநர்கள் அழைப்பு விடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :