திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (15:05 IST)

5 நிமிட நடனத்துக்கு 5 கோடி சம்பளம் பெறும் நடிகை

விருது வழங்கும் விழா ஒன்றில் 5 நிமிடம் நடனமாட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ. 5 கோடி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னால் உலக அழகி பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். விரைவில் இந்தியா வரவிருப்பதாக பிரியங்கா சோப்ரா, அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் வரும் 19-ஆம் தேதி ஜீ சினி அவார்ட் என்ற விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளப் போவதாகவும், இவ்விழாவில் அவர் நடனமாட உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா இந்நடனத்திற்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் பெற உள்ளார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.