திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:47 IST)

அதிக சம்பளம் கேட்கும் சித்திர நடிகை...

திடீரென பேமஸான சித்திர நடிகை, அதிக சம்பளம் கேட்பதாகத் தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.


 

 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் திடீரென பேமஸானவர் சித்திர நடிகை. அவர் வெளிப்படையாக நடந்து கொண்டதால், எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. குறிப்பாக, இளைஞர்கள் அவர் பெயரில் ஆர்மியைக் கூட ஆரம்பித்தனர்.
 
அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எல்லாருக்குமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க, நடிகை மட்டும் எந்தப் படத்திலும் புக்காகவில்லையாம். அதிக சம்பளம் கேட்பதுதான் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார் நடிகை. ஆனால், அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே.