1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:52 IST)

சம்பளத்திற்காக தயாரிப்பாளர் முன் 5 மணி நேரம் நிர்வாணமாக நின்ற நடிகை!!

சினிமா துறையில் நடிகைகள் நல்ல நிலைக்கு வருவதற்கு பல கஷ்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. திறமைகளை தாண்டி நடிகைகள் வாய்ப்பிற்காக செய்யகூடாத காரியங்களையும் செய்ய வேண்டியுள்ளது. பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் செயல் இன்றளவும் சினிமாவில் இருக்கின்றது என்பது வேதனைக்குரிய விஷயம்.
 
இதில் பல ஹீரோயின்கள் தெரிந்தும் தெரியாமலும் சிக்குகின்றனர்.  ஆனால், சமீபகாலமாக நடிகைகள் பலரும் இந்த செயலை  வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர். கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டில் இது குறித்து பேசியுள்ளார் பிரபல நடிகை. Silver Linings Playbook என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை வாங்கியவர் ஜெனிபர் லோரன்ஸ்.
 
இவர் ஒரு பேட்டியில், ஆரம்பக்காலத்தில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க என்னை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தார், அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.