1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (23:50 IST)

ஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும் என்று மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் யுக்ரேனை நேட்டோ அமைப்பில் சேர்க்க கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி ப்ளிங்கன் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ள அலுவல்பூர்வமான பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா வழங்கியுள்ள பதிலை தங்கள் நாடு ஆய்வு செய்துவிட்டு தங்கள் தரப்பை தெரிவிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
 
யுக்ரேனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். யுக்ரேன் உடனான எல்லையில் படைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்யா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.