திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (08:29 IST)

கேள்வியெழுப்பிய செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: வீடியோ வைரல்!

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பாலான ஆதரவை பெற்று ஜோபைடன் அதிபர் ஆனார் என்பதும் அவரது தலைமையில் அமெரிக்கா தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை அதிபர் ஜோ பைடன் சந்தித்தபோது பணவீக்கம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அந்த செய்தியாளரை ஜோ பைடன் தீட்டியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது
 
வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின்போது மைக் ஆனில் இருந்தபோதே ஜோ பைடன் திட்டியது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது