செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (00:04 IST)

உலகின் எஞ்சியிருக்கும் கடைசி தூய ஆரியர்கள்

லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 ப்ரோக்பாக்கள் தங்களை உலகின் எஞ்சியிருக்கும் கடைசி தூய ஆரியர்கள் என்று கருதுகின்றனர்.
 
நாஜிக்கள் 'மாஸ்டர் ரேஸ்' என்று கருதியது உண்மையிலேயே இவர்களைத்தானா அல்லது தங்களுக்கு பயன் அளிக்கும் என்பதால் ஒரு கட்டுக்கதையாக இந்தக்கூற்று சொல்லப்படுகிறதா?  
 
நம் காலத்தின் மிகவும் பிரபலமான போர்க்களத்தை நெருங்கிப் பார்க்கும் உற்சாகம், பயணத்தை ஒரு சுமையாக கருதவிடாது.
 
லேயில் இருந்து வடமேற்காக நகரும் போது ​​கார்கில் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஆனால் பிபிசி குழு வேறு எதையோ கண்டுபிடிக்க இந்த சாலையில் சென்றது.
 
லேயில் இருந்து படாலிக் செல்லும் சுமார் 4 மணி நேர சாலை, நெடுஞ்சாலை போல் உள்ளது. இதற்குப் பிறகு சாலை குறுகி, சிந்து நதியின் கரையை அணைக்கிறது.
 
செப்பனிடப்படாத, சில இடங்களில் செப்பனிடப்பட்ட சாலைகளில் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்த பிறகு கார்கோன் கிராமத்தை சென்றடைகிறோம்.
 
கிராமத்திற்கு சற்று முன்பு பியாமாவில் உங்கள் கவனம் முதலில் 2015 வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை நோக்கி செல்கிறது.
 
வெறுமையான, கற்கள் நிறைந்த மலைகளில் பச்சை திட்டுகள் போன்ற வயல்வெளிகள், உள்ளூர் மக்களின் உழைப்பு நிறைந்த வாழ்க்கைக்கு சாட்சியமளிக்கின்றன. ஆனால் இந்த இடத்தின் மிகப்பெரிய சிறப்பு இந்த மக்களே.
 
கார்கோனில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் நகர்புற மக்களைப்போல தோற்றமளிப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதில்லை. என்ன ஆர்வம் அவர்களை இங்கு கொண்டு வந்துள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
 
கிராமத்தில் உள்ள ஒருவருடன் 5 நிமிட உரையாடல்கூட இந்தக் கேள்விக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. தூய ஆரியராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தனது சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது என்று சண்டிகரில் படிக்கும் சோனம் லாஹாமோ கூறுகிறார்.
 
"ஆரியர்கள் உயரமாகவும் அழகாகவும் இருந்தார்கள் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். இங்குள்ள மக்களிடையே அதை நீங்கள் பார்க்கலாம். நாங்களும் இயற்கையை வணங்குகிறோம். நாங்கள் தூய ஆரியர்கள் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக எங்கள் கலாச்சாரத்தை கருதுகிறோம்,”என்று அவர் சொன்னார்.
 
பியாமா, காகர்கோன், டார்ச்சிக், தாஹ் மற்றும் ஹனு ஆகிய இடங்களில் உள்ள மக்களின் முகங்கள் பிற லடாக் மக்களின் மங்கோலிய அம்சங்களிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
 
லடாக்கின் மற்ற மக்கள் அவர்களுக்கு ப்ரோக்பா என்ற பெயரை அளித்துள்ளனர். உள்ளூர் மொழியில் இதற்கு நாடோடி என்று பொருள்.
 
பௌத்தர்களாக இருந்தாலும் ப்ரோக்பா, கடவுள்களையும் தெய்வங்களையும் நம்புகிறார்கள். நெருப்பு போன்ற இயற்கை சக்திகளை வணங்குகிறார்கள். இன்றைய தலைமுறையில் பலி கொடுப்பது எதிர்க்கப்பட்டாலும் இன்னும் அந்த வழக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது.
 
நெருப்பு மற்றும் இயற்கையின் பிற சக்திகளை வணங்குதல் மற்றும் பலியிடுதல் பற்றிய குறிப்பு வேதங்களிலும் காணப்படுகிறது.
 
இருப்பினும் ப்ரோக்பா கலாச்சாரத்தில், மாடுகளை விட ஆடுகளுக்கு உயர்ந்த அந்தஸ்து உள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப சில இடங்களில் பசுக்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. ஆனால் ஆட்டுப்பால் மற்றும் நெய் இன்னும் இந்த மக்களின் முதல் தேர்வாக உள்ளது.
 
லடாக்கி கலாசாரத்தில் இருந்து வேறுபட்டிருப்பது மட்டுமே அவர்களின் தூய ஆரியத்தின் சான்றாக இருக்க முடியாது என்பது உண்மைதான்.
 
இந்த சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாங் கேல்சன் கார்கில் கல்லூரியில் பாடம் நடத்துகிறார். தனது வரலாற்றின் அடித்தளத்திற்குச்செல்வதில் அவர்  ஆர்வம் காட்டுகிறார்.
 
”பல வரலாற்றாசிரியர்கள் இதை சுட்டிக்காட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஜெர்மன் நிபுணர் ஏ.எச். ஃப்ராங்கி தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் திபெத்' என்ற புத்தகத்தில் எங்கள் மக்களை ஆரிய இனம் என்று குறிப்பிட்டுள்ளார்,” என்று அவர் கூறுகிறார்.
 
சமீபத்தில் தனது மொழியின் அகராதியை வெளியிட்ட கேல்சன், சமஸ்கிருதத்துடன் தனது மொழியின் ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

 
”மற்ற லடாக்கி மொழிகளைப் போலல்லாமல், பல சமஸ்கிருத சொற்கள் எங்கள் மொழியில் காணப்படுகின்றன,”என்கிறார் அவர்.

 
உதாரணமாக, குதிரைக்கு அஷ்வா, சூரியனுக்கு சூர்யா போன்றவை. எண்கள் விஷயத்திலும்   இதையே சொல்லலாம்.

 
தங்கள் சமூகம் பேரரசர் அலெக்சாண்டரின் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் கலாஷ் சாதி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலானா மற்றும் படா பங்கால் பகுதி மக்களும் இதே போன்ற கூற்றுக்களை முன்வைக்கின்றனர் என்று கேல்சன் கூறுகிறார்.

 
அவர்களின் மூதாதையர்கள் ஏழாம் நூற்றாண்டில் கில்கிட்-பல்டிஸ்தானிலிருந்து வந்து படாலிக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியிருக்கலாம் என்று ப்ரோக்பா நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
அக்டோபர் மாதத்தில் அறுவடை காலத்தில் கொண்டாடப்படும் பொனோனா அவர்களின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.

 
1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் - வியப்பூட்டும் வரலாறு
19 டிசம்பர் 2022
விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?
18 டிசம்பர் 2022
2500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு விடை - இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
18 டிசம்பர் 2022
சமீபத்தில் தனது மொழியின் அகராதியை வெளியிட்ட கேல்சன், சமஸ்கிருதத்துடன் தனது மொழியின் ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

 
”மற்ற லடாக்கி மொழிகளைப் போலல்லாமல், பல சமஸ்கிருத சொற்கள் எங்கள் மொழியில் காணப்படுகின்றன,”என்கிறார் அவர்.

 
உதாரணமாக, குதிரைக்கு அஷ்வா, சூரியனுக்கு சூர்யா போன்றவை. எண்கள் விஷயத்திலும்   இதையே சொல்லலாம்.

 
தங்கள் சமூகம் பேரரசர் அலெக்சாண்டரின் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் கலாஷ் சாதி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலானா மற்றும் படா பங்கால் பகுதி மக்களும் இதே போன்ற கூற்றுக்களை முன்வைக்கின்றனர் என்று கேல்சன் கூறுகிறார்.
 
அவர்களின் மூதாதையர்கள் ஏழாம் நூற்றாண்டில் கில்கிட்-பல்டிஸ்தானிலிருந்து வந்து படாலிக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியிருக்கலாம் என்று ப்ரோக்பா நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
அக்டோபர் மாதத்தில் அறுவடை காலத்தில் கொண்டாடப்படும் பொனோனா அவர்களின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.

 
லடாக்கில் குடியேறிய 5,000 'தூய ஆரிய' மக்களுடன் ஒரு சந்திப்பு
ஆரியர்களின் வரலாறு என்ன?

 
இன்றைய இந்தியாவில் இந்தக் கேள்வி அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் ஆரியர்களைப் பற்றி ஒருமித்த கருத்து இல்லை என்பதே உண்மை.

 
இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் இந்த குழு மத்திய ஆசியாவில் இருந்து கிமு 2000-1500 இல் இந்தியாவிற்கு வந்திருக்கும் என்று 20 ஆம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டது.
 
இந்த மக்கள் சிறந்த உணவு வாய்ப்புகளைத் தேடி அலைந்த நாடோடிகளா அல்லது தாக்குதல்கார்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆரியர்களே இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கோட்பாடும் கடந்த இரண்டு தசாப்தங்களில் வேகம் பெற்றுள்ளது.
 
பிரிட்டனின் ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் பி ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 விஞ்ஞானிகள் குழு உண்மையை கண்டறிய, மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவின் மக்கள்தொகையின் ஒய்-குரோமோசோமை ஆய்வு செய்தது. ஒய்-குரோமோசோம் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே செல்கிறது.
 
Bronze age(கி.மு. 3000-1200)இல் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
 
"பெண்களின் மரபணுக்கள் கிட்டத்தட்ட 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறிய முதல் மனிதர்களைப் போலவே இருக்கின்றன. ஆனால் ஆண்களின் மரபணுக்கள் வேறுபட்டவை என்றும் தென்மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுடன் தொடர்புடையவை என்றும் எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது,” என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
 
ஆரியர்கள் உண்மையில் மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடலைச் சுற்றியுள்ள புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவிற்கு வந்திருந்தால், அவர்களின் பாதை கில்கிட்-பல்டிஸ்தான் வழியாகச் சென்றிருப்பது சாத்தியமாகும்.
 
ப்ரோக்பாவின் டிஎன்ஏவை பரிசோதிக்க கேல்சன் முயற்சி செய்கிறார்.
 
இது குறித்து மேலும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். ”ஆரியர்களின் வரலாற்று பிம்பம் வெற்றியாளர்களின் உருவமாகவே இருந்து வருகிறது. இன்றைய ப்ரோக்பா இளைஞர்கள் இந்த அடையாளத்தைப் பற்றி ஆர்வமாக இருப்பதற்கு இதுவே காரணம், ஆனால் இந்தக் கூற்றுக்கு அதிக ஆராய்ச்சி தேவை என்று நாங்கள் நம்புகிறோம்,”என்கிறார் அவர்.
 
’கர்ப்ப சுற்றுலா’ பற்றிய கதைகள்
 
இணையத்தின் வருகைக்குப் பிறகு, ப்ரோக்பாவின் இந்த அடையாளம் உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'சுத்த ஆரிய விதை'யைத் தேடி ஜெர்மன் பெண்கள் இங்கு வந்த கதைகள் இந்த கிராமங்களில் பிரபலம்.
 
திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சீவ் சிவனின் 2007 ஆவணப்படத்தில், ஒரு ஜெர்மன் பெண் இதை கேமராவில் ஒப்புக்கொள்வதைக் கேட்கலாம்.
 
பெரும்பாலான ப்ரோக்பாக்கள் இதைப் பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள்.
 
”பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மன் பெண் என்னை லே ஹோட்டலில் தன்னுடன் வைத்திருந்தார். கர்ப்பமான பிறகு அந்தப் பெண் ஜெர்மனிக்குத் திரும்பினார். சில வருடங்கள் கழித்து தன் குழந்தையுடன் என்னை சந்திக்க வந்திருந்தார்,” என்று படாலிக்கில் கடை நடத்தி வரும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தெரிவித்தார்.
 
லடாக்கில் குடியேறிய 5,000 'தூய ஆரிய' மக்களுடன் ஒரு சந்திப்பு
பட மூலாதாரம்,RAJESH JOSHI/BBC
இன்றைய ப்ரோக்பா என்ன விரும்புகிறார்?
ப்ரோக்பாவின் தற்போதைய தலைமுறையில் படிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. பெண்களுக்கு படிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் வேலைகள் குறைவாகவே உள்ளன.
 
பாதாமி(apricot) தோட்டம், ராணுவம் மற்றும் எல்லை சாலை அமைப்பின் வேலைகளில் இருந்து கிடைக்கும் ஊதியம்தான் மிகப்பெரிய வாழ்வாதாரமாக உள்ளது.
 
இன்றும் காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளும் திறக்கப்படுகின்றன.
 
மொபைலின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், ப்ரோக்பா இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் எல்லைக்கு அப்பால் உள்ள கில்கிட் இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திகொண்டுள்ளனர்.
 
'அவர்களும் எங்கள் மொழியை பேசுகிறார்கள், தங்களை ஆரியர்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்' என்கிறார் லாமோ.
 
தங்கள் கிராமங்களில் வேலை செய்வதை விரும்புகிறார்களா அல்லது வாய்ப்பு கிடைத்தால் நகரத்தில் குடியேற விரும்புகிறார்களா என்று இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல ப்ரோக்பாக்களிடம் கேட்டோம். இதற்கு கலவையான பதில்கள் கிடைத்தன.
 
”வாழ்வாதாரத்துடன் கூடவே எங்கள் அடையாளத்தையும் பாதுகாப்பதே இன்று எங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்னை,” என்கிறார் கேல்சன்.
 
21 ஆம் நூற்றாண்டின் இந்த தூய ஆரியர்களின் போராட்டம் பேரசுகளுக்காக அல்ல, வேலைவாய்ப்பிற்காக உள்ளது. ஆனால் தங்களின் அடையாளத்தை இழந்த பிறகு அது கிடைக்குமேயானால் அந்த வெற்றி முழுமையாக இருக்காது.