புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:18 IST)

அமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதி அழிவுக்கு என்ன காரணம்?

அமேசான் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்றும், வரும் ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
 
தனது அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், இதனை ஜி7 மாநாட்டில் ஆலோசிக்க வேண்டும் என்று கூறுவது பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சீனரோ கூறியுள்ளார். பிரேசில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
 
பிரேசில் முழுவதும், குறிப்பாக அமேசான் பகுதிகளில், காட்டுத்தீ பற்றுவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
போல்சீனரோவின் அரசாங்கம் காடுகளை அழிக்க ஊக்குவிப்பதே இதற்கு காரணம் என்று சூழலியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
பிரேசில் முழுவதும் இந்தாண்டு மட்டும், 75,000 முறை பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 2018-ல் 40,000 முறை ஏற்பட்டதை விட இது மிகவும் அதிகமாகும்.