புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:38 IST)

ரூ.18,000 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 ஆஃபர்: அள்ளிக்கொடுக்கும் ஜியோ!!

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. அறிமுக விற்பனையாக ஜியோ சலுகைகள் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளின் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. 
விவோ எஸ்1 சிறப்பசங்கள்: 
# 6.38 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# MediaTek Helio P65 MT6768 SoC இணைக்கப்பட்டுள்ளது
# 4 ஜிபி ராம் + 128 ஜிபி; 6 ஜிபி ராம் + 64 ஜிபி; 6 ஜிபி ராம் + 128 ஜிபி 
# f / 1.78 லென்ஸ் உடனான 16MP முதன்மை கேமரா + f/ 2.2 wide-angle லென்ஸ் உடனான 8MP இரண்டாம் நிலை கேமரா + f/2.4 லென்ஸ் உடனான 2MP மூன்றாம் நிலை கேமரா 
# முன்பக்கத்தில், f/ 2.0 லென்ஸ் உடனான 32MP அளவிலான செல்பீ கேமரா 
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4,500 எம்ஏஎச் பேட்டரி 
விவோ எஸ்1 விலை விவரம்: 
1. 4 ஜிபி ராம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,990
2. 6 ஜிபி ராம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.18,990
3. 6 ஜிபி ராம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19.990
 
விவோ எஸ்1 சலுகை விவரம்: 
1. எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் வாங்கினால் 7.5% கேஷ்பேக் 
2. ரூ.10,000 மதிப்பிலான ஜியோ சலுகைகள்.