வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (11:18 IST)

சிரியா போர்: தீவிரவாத தாக்குதலில் 4 ரஷ்யர்கள் கொலை

கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் அல்-சொர் மாகாணத்தில் தீவிரவாதிகளால் குறைந்தது 4 ரஷிய போராளிகள் கொல்லப்பட்டனர்.
அவர்கள் இயக்கிக் கொண்டிருந்த சிரிய ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு ராணுவ ஆலோசகர்கள் உயிரிழந்தனர். ஐந்து ரஷ்யர்கள் காயமடைந்தனர்  என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம், டெய்ர் அல்-சொர் மாகாணத்தை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ஆனால், ஜஎஸ் போராளிகள் அங்கு இன்னமும் செயல்பட்டு வருகின்றனர்.
 
சிரிய போரில் அதிகாரபூர்வமாக 90 பணியாளர்களை ரஷ்யா இழந்துள்ளது. செப்டம்பர் 2015ல் சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக்கு ஆதரவாக ரஷ்யா தலையீடு  செய்ததில் இருந்து ராணுவ ஒப்பந்ததாரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். சில நடமாடும் பயங்கரவாதிகள் குழு, இரவில் சிரிய ராணுவ பீரங்கிகளை தாக்கியதாக ஆர் ஐ ஏ நொவஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் ரஷ்ய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
நடந்த சண்டைகளில், 43 தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. போர் தொடங்கி ஏழாண்டுகள் ஆகிய நிலையில், ரஷ்ய  மற்றும் இரானிய ராணுவத்தின் ஆதரவு பெற்றிருக்கும் சிரிய அரசாங்கம், அலெப்போ உள்ளிட்ட பெரும்பாலான மத்திய சிரியாவை தன் கட்டுப்பாட்டினுள்  வைத்துள்ளது.
 
கிளர்ச்சிப் படைகள் தற்போது இட்லிப் மாகாணத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. ஏழாண்டுகளாக நடந்து வரும் இந்த போரில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட  மக்கள் கொலை செய்யப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.
சிரிய மக்கள் தொகையில் பாதியான 22 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அதில் குறைந்தது, 6.1 மில்லியன் பேர் அந்நாட்டின்  உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர் மற்றும் 5.6 மில்லியன் பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். பெரும்பாலான மக்கள் லெபனான் போன்ற அண்டை  நாடுகளுக்கு சென்றுள்ளனர்.