புலியின் பிடியில் இருந்து லாவகமாக தப்பிய நபர்
மத்திய பிரதேசத்தில் புலியிடம் சிக்கிய நபர் லாவகமாக தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்பஸ்பூர் பகுதியில் நபர் ஒருவர் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த நபரை நோக்கி வேகமாக பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, தான் வைத்திருந்த கோடாரியின் கைப்பிடி பகுதியை புலியின் வாயில் வைத்து, புலி தன்னை கடித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், புலியை விரட்டிவிட்டு, காயம்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.