வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (08:31 IST)

சேப்பாக் அணியை அசால்ட்டாக தோற்கடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

நேற்றைய டி.என்.என்.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் அணியை அசால்ட்டாக தோற்கடித்தது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதியது.
 
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த சேப்பாக அணி தொடக்க வீரர்களான கார்த்திக்கும், பாஸ்கரன் ராகுலும் 13, 14 என சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களகிறங்கிய கோபிநாத் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.இறுதியில் சேப்பாக் அணி 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி தொடக்க வீரர்களான கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் 10.2 ஓவர்களில் 89 ரன்களை குவித்தனர். பின் ஹரி நிஷாந்த் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய விவேக் அதிரடியாக ஆடினார்.
 
13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் அணியை அதிரடியாக வீழ்த்தியது.
 
இந்த வெற்றியின் மூலம்  திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5வது வெற்றியுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.