1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (23:41 IST)

சீனாவில் பிறப்புகள் குறைவதால் மக்கள்தொகை வளர்ச்சி பூஜ்ஜியம் – எச்சரிக்கும் நிபுணர்கள்

ஜனவரி 17ஆம் தேதியன்று, தேசிய புள்ளியியல் துறை (NBS), சமீபத்திய மக்கள்தொகை தரவுகளுடைய உண்மை அறிக்கைகளை சீன ஊடகங்கள் வெளியிட்டன. "சீனாவின் மக்கள்தொகை 2021-இல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது," என்ற தலைப்பின் கீழ் ஆங்கில மொழியில் அரசு நடத்தும் சைனா டெய்லி செய்தி வெளியிட்டது.
 
இருப்பினும், தனியாரால் நடத்தப்படும் வணிக செய்தித் தளமான யிகாய் (Yicai), சினாவின் மக்கள் தொகை 480,000 மட்டுமே அதிகரித்து 2021-இல் 1.41 பில்லியனை எட்டியுள்ளதாகக் கூறியது.
 
மேலும் கடந்த 60 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் என்றும் குறிப்பிட்டது. தேசிய பிறப்பு விகிதம் 2021-இல் ஆயிரத்திற்கு 7.18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் 1950-க்குப் பிறகு மிகக் குறைவாகவும் உள்ளது.
 
நேஷனல் பிசினஸ் டெய்லி என்ற செங்கு மீடியா குழுமத்திற்குச் சொந்தமான நாடு தழுவிய நிதிசார் செய்தித்தாள், பிறப்பு விகிதம் குறைவதற்கான மூன்று காரணங்களை எடுத்துரைத்தது. குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஐந்து மில்லியன் வரை குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் பணியகத்தின் இயக்குநர் நிங் ஜிஸே (Ning Jizhe) கூறியதாக அவரை மேற்கோள் காட்டியுள்ளது. மேலும் அதில் அவர், "அதிகரித்து வரும் பிரசவ செலவு மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் இளைஞர்களின் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுவதற்கான திட்டங்களையும் பாதித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
 
அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசியவாத செய்தித்தாள் குளோபல் டைம்ஸ், 2021-ஆம் ஆண்டில் சீனாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகை ஒரு நிலையான வளர்ச்சியைப் பராமரித்துள்ளது, மேலும் சில காலத்திற்கு அது 1.4 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நிங் ஜிஸேவின் கருத்துகளை வலியுறுத்தியது. கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட "மூன்றாவது குழந்தை கொள்கையின்" விளைவு படிப்படியாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அரசுக்குச் சொந்தமான சீனா யூத் டெய்லி கூறியது.
 
சீனாவில் வரவுள்ள மக்கள்தொகை நெருக்கடி பற்றிய வல்லுநர்களின் எச்சரிக்கைகளை சில செய்தி நிறுவனங்கள் உயர்த்திக் காட்டிள்ளன.
 
"2027-க்குப் பிறகு சீனா, 'பூஜ்ஜிய வளர்ச்சி' அல்லது, 'எதிர்மறை வளர்ச்சியை' சந்திக்கும் என்று முந்தைய கணிப்புகள் கணித்தன. ஆனால் சமீபத்திய தரவுகள், இது எதிர்பார்த்ததைவிட ஐந்து ஆண்டுகள் முன்பே நடக்கலாம்," என்று ஷாங்காய் சார்ந்த செய்தித் தளமான தி பேப்பரிடம ரென்மின் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை மேம்பாட்டு ஆய்வு மையத்தின் பேராசிரியரான சென் வெய் (Chen Wei) கூறினார்.
 
வயதான மக்கள்தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளகள் நீண்ட கால சமூக-பொருளாதார தாக்கங்களைக் கொண்டுவரும் என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சீன மக்கள்தொகை சங்கத்தின் துணைத் தலைவருமான லு ஜிஹூவாவை (Lu Jiehua) கூறியதாக அரசு நடத்தும் செய்தி இதழான சைனா நியூஸ் வீக்லி மேற்கோள் காட்டியுள்ளது.
 
சீனா மக்கள் தொகை வீழ்ச்சி
 
ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற ஆங்கில செய்தித்தாள், சீன மாகாண மற்றும் முனிசிப அதிகாரிகள், பெற்றோர்களுக்கு அதிக விடுப்பு மற்றும் இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு நிதியுதவி அளிப்பது உட்பட, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
 
இருப்பினும், ஹாங்காங்கின் தாராளவாத நாளிதழான மிங் பாவ் பெய்ஜிங்கில் உள்ள இளைஞர்களைப் பேட்டி கண்டது. அவர்களில் பெரும்பாலோர், "மூன்றாவது குழந்தை கொள்கைக்கு", காத்திருந்து பார்க்கலாம்" என்ற அணுகுமுறையில் உள்ளனர். சிலர் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. ஏனெனில், தங்களால் செலவு செய்ய முடியவில்லை, குழந்தைகளை வளர்ப்பதில் அர்ப்பணிக்க நேரம் இல்லை என்று கூறினர்.
 
பிறப்பு விகிதப் பரிந்துரைக்காக மௌனமாக்கப்பட்ட பொருளாதார நிபுணர்
சீனப் பொருளாதார் நிபுணர் ரென் ஸெபிங் (Ren Zeping), பிறப்பு விகிதத்திற்கு உதவ மத்திய வங்கி நிதியுதவி அளிக்கவேண்டும் என்ற அவருடைய பரிந்துரையை அடுத்து, சீனாவின் ட்விட்டர் போன்ற வெய்போவில் பதிவிட தடை விதிக்கப்பட்டதாக, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஜனவரி 13 அன்று செய்தி வெளியிட்டது.
 
ஜனவரியில், ரென் தனது வெய்போ கணக்கை 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர். "வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்த பிறந்த விகிதம் போன்றவற்றைச் சரிசெய்ய, மக்கள் சமூகத்தை 10 ஆண்டுகளில் 50 மில்லியன் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க, சீனாவின் மக்கள் வங்கி கூடுதலாக 2 டிரில்லியன் யுவான் அச்சிட வேண்டும்" என்றார்.
 
 
வெய்போ பின்னர் ரென்னுடைய கணக்கில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் அவர், "சில சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாக," கூறி அவரைத் தடை செய்தது. "குறைந்த பிறப்பு விகிதங்களுக்குத் தீர்வு காணப்பட்டது," என்ற தலைப்பில் ரென்னின் அசல் கட்டுரையும் அவருடைய வீசேட்டிலிருந்து (WeChat) நீக்கப்பட்டது. இருப்பினும், தனியாருக்குச் சொந்தமான பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட வணிகச் செய்தி நிறுவனமான கெய்கிசின் மற்றும் சீன செய்தி இணையதளமான சீனா ஃபைனான்ஸ் இன்னும் அவருடைய கட்டுரையை எடுத்துச் செல்கின்றன.
 
குவாங்டாங்கை தளமாகக் கொண்ட வணிகச் செய்தி நாளிழதழான 21-ஸ்ட் செஞ்சுரி பிசினஸ், ரென்னின் கருத்துகள் மிகவு அவசரமானது என்று பெயர் குறிப்பிடாத தொழில்துறையினரை மேற்கோள் காட்டியது. அது மேலும், "2 டிரில்லியன் யுவானை அச்சிட சீனாவின் மக்கள் வங்கியை வலியுறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு நுணுக்கமான வாதங்கள் தேவை. மேலும், அவருடைய கருத்துகள் ஆத்திரமூட்டும் வகையில் இருக்கலாம்," என்று குறிப்பிட்டது.
 
வெய்போவின் சில பயனர்கள் ரென் மற்றும் அவருடைய கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்ததோடு, அவருக்கு விதிக்கப்பட்ட தடை தேவையற்றது என்றும் கூறினர்.