ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:55 IST)

விளையாட்டில் ஆர்வம் காட்டும் சூப்பர் ஸ்டார் ... வைரல் புகைப்படம்

இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்றது பாலிவுட் . இங்கு தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படத்திற்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகர்கள், நடிகைக்கள் மற்ற மொழிப்படங்களைவிட கோடிக்கணக்கில் சம்பளம் பெருகின்றனர். அதனால் புகழும் செல்வாக்கும் அதிகம்.

இந்நிலையில் பாலிவுட்டில் ரொமாண்டிக் கிங்,பாலிவுட்  பாட்ஷா, சூப்பர் ஸ்டார் எனப் பலப் பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு மற்றா ஹீரோக்களைவிட ரசிகர்கள் அதிகம்..குறிப்பாக பெண் ரசிகைகள்.

கடந்த வருடம் ஷாருக்கான் அனுஷ்கா இருவரது நடிப்பில் வெளியான ஜீரோ படம் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு ஷாருக்கான் வேறு படத்தில் எப்போதும் நடிப்பார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அவர் பில்லியர்ட்ஸ் விளையாடும் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் நீண்ட தலைமுடியுடன் ஸ்டைலிஸாக அவர் காட்சியளிக்கிறார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.