திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (23:54 IST)

யுக்ரேன், ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடரலாம்

யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களுக்கு தொடரலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம் என்றும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறினார்.
 
பெலாரூஸ் உடனான யுக்ரனிய எல்லையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
 
அதே சமயம், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும், மக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பான தாழ்வாரங்களை உருவாக்கவும் சில காலம் சண்டையை நிறுத்தவும் ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
 
ஆனால் இந்த முடிவை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று யுக்ரேன் கூறியிருக்கிறது