1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (21:16 IST)

"இஸ்லாமியர்கள் முன்னேற விரும்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என நரசிம்ம ராவ் கூறினார்"

இஸ்லாமிய மக்களின் முன்னேற்றம் காங்கிரஸின் பொறுப்பல்ல. அவர்கள் முன்னேற விரும்பவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் தலைவர் கூறியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தேர்தலுக்குப் பிந்தைய தன் முதல் நாடாளுமன்ற உரையில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் உரையை முடித்தவுடன் நன்றியுரையைத் தொடங்கியபோது ஷா பானு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறிய இந்த சர்ச்சைக்குரிய பேச்சை சுட்டிக் காட்டினார்.
 
பிரதமர் தன்னுடைய உரையில் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் கூறவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அந்த தலைவர் யார் என கேட்டபோது யூடியுப் லிங்க் அனுப்புவதாக கூறினார்.
 
மசூதி கட்ட எத்தியோப்பியாவின் இந்த நகரத்தில் தடை- காரணம் என்ன?
பிரதமரின் இந்த பேச்சினால் காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் மொஹம்மத் கான் அனைவரின் கவனத்திற்கும் வந்தார். ராஜீவ் காந்தியின் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஆரிஃப் கான் தான் இவ்வாறு கூறியது.
 
”6-7 வருடத்திற்கு முன்பு ஒரு தொலைகாட்சி நேர்காணலின்போது என்னுடைய ராஜினாமாவைத் திரும்ப பெற்றதன் காரணத்தை கேட்டபோது நான் ராஜினாமா செய்தவுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டேன் என கூறியிருந்தேன்.”
 
"அதன்பின் அடுத்த நாள் நான் அருண் சிங்கை சந்திதேன். அவர் நான் செய்தது நியாயமானதாக இருந்தாலும் கட்சிக்கு நிறைய கஷ்டங்களை கொடுக்கும் என கூறினார். நரசிம்ம ராவ், நீ பிடிவாதக்காரன், இப்போது ஷா பானுகூட தன்னுடைய நிலையை மாற்றிவிட்டார் என கூறியதாக நான் கூறியிருந்தேன்," என ஏ.என்.ஐயிடம் கூறியுள்ளார்.
 
"என்னுடைய நேர்காணல் பற்றி கூறி, ஒரு சமூகத்தை எப்படி ஏமாற்றுவது என்பது குறித்த தகவலைத் தர முயன்றுள்ளார். இது ஒரு தெளிவான செய்தியாகும்," என இதைப் பற்றி ஆரிஃப் கான் கூறியுள்ளார்.
 
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஷா பானுவை நினைவிருக்கிறது; ஆனால் கும்பல் கொலைகளால் உயிரிழந்த அக்லக், தப்ரேஸ் அன்சாரி, பெஹ்லூ கான் ஆகியோர் நினைவில்லை என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
 
"இஸ்லாமியர்கள் சாக்கடையில் இருப்பது நரேந்திர மோதிக்கு தெரியும் என்றால் அவர்களை முன்னேற்ற ஏன் அவர் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது," என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
 
உண்மையில் அந்த நேர்காணலில் ஆரிஃப் கான் கூறியது என்ன?
 
பிரதமர் மோதி சுட்டிகாட்டிய நேர்காணலில்,"இஸ்லாமியர்களும் நமது வாக்காளர்கள்தான். அவர்களை ஏன் நாம் வெறுப்படைய வைக்க வேண்டும். நாம் சமுதாய சீர்திருத்தவாதிகள் அல்ல. காங்கிரஸ் சமுதாய சீர்திருத்த வேலைகள் செய்வதில்லை. நாம் அரசியல் செய்கிறோம். அவர்கள் முன்னேற விரும்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று நரசிம்ம ராவ் என்னிடம் சொன்னார்," என கூறியிருந்தார்.
 
ஷா பானு வழக்கின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற ராஜீவ் காந்தி மேல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவ்வாறு அழுத்தம் கொடுத்த தலைவர்களுள் நரசிம்ம ராவ், அருண் சிங் மற்றும் என்.டி.திவாரி போன்றவர்களும் அடங்குவார்கள் எனவும் கூறியிருந்தார்.
 
இதைத்தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பத்தை கையாளும் அமித் மால்வியா மோதியின் காணொளியையும் ஆரிஃப் கானின் காணொளியையும் சேர்த்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
 
இத்தனை ஆண்டு காலம் ஆட்சியிலிருந்தும் மக்களுக்கு சம உரிமை கொடுக்கும் வாய்ப்பை தவற விட்டனர் என காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளார் பிரதமர் மோதி.