திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (20:08 IST)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார் ! தொண்டர்கள் குஷி

கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னனியினரின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான அப்துல்லா குட்டி என்பவர் தற்போது பாகவில் இணைந்துள்ளார். இந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் அடைந்துள்ளனர்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் எம்பியான அப்துல்லா குட்டி இன்று டெல்லி சென்றார். அதன் பின்னர் , அப்துல்குட்டி(52),யாரும் எதிர்பார்க்காத விதமாக, பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
 
இவர் முதலில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்துவிட்டு , 2009 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.
 
இவர் சமீபத்தில் மோடியை புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.