புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (09:15 IST)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் காலமானார்

ஒருவித புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலென் தனது 65 வயதில் உயிரிழந்துள்ளார்.
 
குருதியியல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பால், குருதியியல் புற்றுநோய் தன்னை மீண்டும் தாக்கியுள்ளதாக கடந்த வாரம்தான் அறிவித்திருந்தார்.
 
பாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், "என்னுடைய சிறந்த மற்றும் பழைய நண்பர்களில் ஒருவரை இழந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது. அவர் இல்லையெனில் கணினிகளின் உருவாக்கமே சாத்தியமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.