அந்த கடவுளின் துகள் நீதானா ...கடவுளின் துகள் கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்...
அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியான லியோன் லெடர்ன் கடந்த 1988ஆம் ஆண்டில் முவான் நியூட்ரினோ கண்டுபிடிப்புக்காக வேறு இரண்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து நோபல் பரிசு பெற்றார்.
இந்த கண்டு பிடிப்பு பல உண்மைகள் கண்டறியவும் ,இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்கும் என்பதற்கான ஒரு அடிப்படை தேற்றத்தையும் அவரது கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ள பேருதவியாக இருந்தது. தன் கண்டுபிடிப்பின் மூலமாக தான் வாழும் காலத்திலேயே பேரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில் உலகையே நட்டாமைசெய்யும் அமெரிக்க நாட்டில் உள்ள இடாஹோ மகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் இன்று மரணமடைந்தார்.அவரது இறப்புக்கு பல்வேறு விஞ்ஞானிகள் தங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.