அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக வேண்டும் - கிம்
அமெரிக்காவுடன் `பேச்சுவார்த்தை, மோதல்` என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ராஜீய பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முயற்சிகளுக்கு அதிபர் கிம் செவி சாய்க்கவில்லை. வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில்தான் கிம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ பைடனின் நிர்வாகம் குறித்து முதன்முறையாக கிம் இப்போது பேசியுள்ளார். இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி சந்திப்பில் முதன்முறையாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை கிம் ஒப்புக் கொண்டார்.