திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (09:48 IST)

ஈபிஎஸ் vs ஓபிஎஸ் : முற்றும் போஸ்டர் மோதல் !

ஈபிஎஸ்க்கு எதிராக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

 
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே முரண்பாடு நிலவுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியைடைந்ததற்கு ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதோடு, தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து ஈபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக பொறுப்பாளர்கள் என்ற பெயரில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக ஒபிஎஸ் போட்டோவுடன் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக ஈபிஎஸ்சை தேர்வு செய்த எம்.எல்.ஏகளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.