வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (12:45 IST)

எங்ககிட்ட சாப்பாடு கூட இல்ல.. கடும் பஞ்சம்! – உண்மையை ஒத்துக் கொண்ட வடகொரியா!

வடகொரியாவில் சூறாவளி, கொரோனா பரவல் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே வருகிறது. முன்னதாக வடகொரியா ஆயுத சோதனைகள் நடத்தியதால் அமெரிக்காவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், வடகொரியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையிலும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து வடகொரியா கூறி வந்த நிலையில், சமீபத்தில்தான் கொரோனா பாதிப்புகளை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வட கொரியாவில் மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், ஒரு வாழைப்பழம் ரூ.500 வரை விற்பனையாவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என அதிபர் கிம் ஜாங் உன் ஒத்துக் கொண்டுள்ளார்.