தொடர்புடைய செய்திகள்
- இலங்கை நபர் அகதியாக பதிவு செய்ய முயற்சி - காவல்துறை விசாரணை
- இலங்கைக்கு அடுத்த கட்டமாக உதவி பொருட்கள்! – தமிழக அரசு திட்டம்!
- பசில் ராஜபக்சே ராஜினாமா: அரசியலில் இருந்தும் விலகலா?
- பசில் ராஜபக்ச எம்பி பதவியை ராஜினாமா செய்கிறாரா? இலங்கையில் பரபரப்பு
- 'இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுத் தட்டுப்பாடு' - எச்சரிக்கும் ஐ.நா
இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்கிய இந்தியா
இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தமொன்றில் இன்று கையெழுத்திட்டார்.
65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.
சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கடன் வசதி கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இன்று இடம்பெற்றது
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தமது முன்னுரிமை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்த கடன் வசதி எதிர்வரும் சிறுபோக பருவத்தில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அடுத்த கட்டுரையில்